எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து பயணச் சீட்டு விலைகள் அதிகரிக்கப்பட வேண்டுமென தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கின்றார்.
விரைவில் இதுகுறித்து அரச தரப்புடன் பேச்சு நடத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கம் நேற்றைய தினம், பெற்றோல், டீசல், மண்ணெண்ணை ஆகியவற்றின் விலைகளை அதிகரித்திருந்த நிலையிலேயே இக்கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments