Home » » மட்/தேற்றாத்தீவைச் சேர்ந்த திருமதி. வாசுகி - துரையப்பா அவர்கள் ஆசிரியப் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்

மட்/தேற்றாத்தீவைச் சேர்ந்த திருமதி. வாசுகி - துரையப்பா அவர்கள் ஆசிரியப் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்


 (சித்தா)

மட்டக்களப்பு தேற்றாத்தீவில் இராசையா தெய்வானை தம்பதிகளுக்கு 1961.06.18 ஆம் திகதி பிறந்த திருமதி. வாசுகி துரையப்பா அவர்கள் பட்டிருப்பு கல்வி வலயத்தில் 36 வருட கல்விச் சேவையாற்றி 2021.06.17 அன்று பணி நிறைவெய்தி இன்று தனது 60 ஆவது அகவையைக் கொண்டாடுகின்றார். இவர் தனது ஆரம்பக்கல்வியை மட்/தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்திலும் தொடர்ந்து மட்/தேற்றாத்தீவு மகா வித்தியாலயம், உயர்கல்வியை மட்/வின்சன்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலை முதலானவற்றில் கற்றார். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைமாணிப் பட்டத்தையும் (1981 - 1984) இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் பட்ட மேற்கல்வி டிப்ளோமா பாடநெறியையும் (1995) நிறைவு செய்துள்ளார். 

தனது முதல் ஆசிரியர் நியமனத்தை 1985.12.26 ஆம் திகதி மட்/குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் ஆரம்பித்தார். அதன் பின் மட்/களுதாவளை மகா வித்தியாலயம் (1994 – 2005), மட்/எருவில் கண்ணகி மகா வித்தியாலயம் (2005 – 2009) முதலானவற்றில் பணியாற்றி இறுதியாக தனது சொந்தக் கிராமத்தில் மட்/தேற்றாத்தீவு மகா வித்தியாலயத்திலும் தனது ஆசிரியர் பணியை சிறப்பாக முன்னெடுத்துள்ளார். கற்கும் காலத்திலும் கற்பித்த காலத்திலும் விளையாட்டு, கவிதையாக்கம், கதையாக்கம், நடனம் முதலான துறைகளிலும் சிறந்த ஈடுபாடுடையவராக விளங்கினார். 

ஆசிரியத் துறையில் சிறப்பாக வரலாறு, புவியியல், குடியியல், இந்துசமயம் முதலான பாடங்களை கற்பித்து அதிகளவான மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகக் காரணமாகவிருந்தார். பாடத்துறையில் அவர் காட்டிய சிறப்பு, நியமனம் பெற்றது முதல் ஓய்வு பெறும் வரை க.பொ.த         (சா/த)ரம்  மற்றும் க.பொ.த (உ/த)ரம் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் வரலாறு பாட பரீட்சகராகவும், பிரதம பரீட்சகராகவும் பணியாற்றியுள்ளமையும் பாடசாலை, வலய மட்டங்களிலும் பாடத்துறை சார்பாக பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். 

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |