(Thusjanthan)அம்பாறை மாவட்டத்தில் பயணக்கட்டுப்பாடு காரணமாக குழந்தைகளுக்கான பால் மா வகைகளைப்பெற்றக்கொள்ள முடியாதுள்ளவர்களுக்கு பால் மா வழங்கும் செயற்திட்டம் நேஷன் லீடர்ஸ் பவுண்டேன் நிதிஅனுசரணையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
நேஷன் லீடர்ஸ் பவுண்டேசன் பணிப்பாளர் சமுக செயற்பாட்டாளர் ஜெகநாதன் கிஷான் தலைமையிலான குழுவினர் இவ் பயணக்கட்டுப்பாட்டுக் காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதிக்குள்ளானவர்களுக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கிவருகின்றனர். கொரோனா தொற்றின் முதலாவது அலை ஏற்பட்ட காலம் தொடக்கம் தற்போது வரை பாதிக்கப்பட்ட மக்களுக்காக 27 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நிவாரணப்பணியில் நேஷன் லீடர்ஸ் பவுண்டேசன் ஈடுபட்டள்ள து .
இதற்கமைய பாண்டிருப்பு கிராமத்தில் முதற்கட்டமாக வருமானம் குறைந்த ஒரு வயது தொடக்கம் ஒன்பது வயதுக்குட்பட்ட சிறுவர்கள் உள்ள தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இவ் பால்மா வழங்கிவைக்கப்ட்டன.. அத்துடன் வருமானத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டன. குழந்தைகளுக்கான பால்மா வகைகளை நேஷன் லீடர்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் ஜெகநாதன் கிசான், அகரம் சமுக அமையத்தின் தலைவர் செ.துஜியந்தன் ஆகியோர் வழங்கவைத்தனர்.
0 Comments