Home » » மட்டக்களப்பில் கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பொது இடங்களில் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு வேண்டுகோள்- புதிய வகை கொரோனா மட்டக்களப்புக்கு வரும் ஆபத்து...!!

மட்டக்களப்பில் கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பொது இடங்களில் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு வேண்டுகோள்- புதிய வகை கொரோனா மட்டக்களப்புக்கு வரும் ஆபத்து...!!

 


மட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 89 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 2பேர் உயிரிழந்துள்ளதாகவும் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள டெல்டா வைரஸ் மட்டக்களப்பிற்கும் வருவதற்கு சந்தர்ப்பம் அதிகம் காணப்படுவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.


இன்று(21) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,
மட்டக்களப்பில் அண்மையில் அல்பா வேரியன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கையில் தற்போது டெல்டா வேரியனும் இனங்காணப்பட்டுள்ளது. இதுவும் மட்டக்களப்புக்கு வரக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்படுகின்றன.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையில், 3968பேர் மட்டக்களப்பில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 63 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆகையினால் மக்கள் அனைவரும் ஒன்றுகூடுவதை தவிர்த்து, சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக மேலும் கடைப்பிடிக்க வேண்டும், அத்துடன் மரண வீடுகளில் அதிகளவிலானவர்கள் கூடுவதை தவிர்ப்பதுடன், கோயில்கள் தேவாலயங்களில் சன நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாக அறியக்கிடைக்கின்றது அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டியது அவசியம் ஆகவே உரிய நடைமுறைகளை கடைப்பிடித்து கொரோனா தொற்று நிலையிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டியது அனைத்து பொது மக்களினதும் கடமையாகும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |