Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நாளை பயணத்தடை தளர்கின்ற நிலையில் இராணுவத்தளபதி வெளியிட்ட தகவல்

 


நாடளாவிய ரீதியில் உள்ள பல பகுதிகள் நாளை அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் என தேசிய கொவிட் தடுப்பு செயலணி அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா இன்று இதனை அறிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடு நாளை தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, கம்பஹா, அம்பாறை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தளை, புத்தளம், நுவரெலியா, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், கொழும்பில் உள்ள 24 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

Post a Comment

0 Comments