Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சுமார் 8,000 கொரோனா நோயாளிகள் வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் இறப்பவர்களின் எண்ணிக்கை சில நாட்களில் அதிகரிக்கும் - GMOA தகவல்


கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 8,000 பேர் சிகிச்சை பெறாமல் அவர்களது வீடுகளிலேயே அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

எனினும் இவர்களில் கொரோனா ஆபத்தான நிலையில் ஒட்சிசனை நம்பியுள்ள 330 நோயாளிகள் மே மாதம் 31 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளனர்.

ஒட்சிசனை நம்பியுள்ள 149 நோயாளிகள் கடந்த 27 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நான்கு நாட்களுக்குள் அவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடி காரணமாக கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை 

 சில நாட்களில் அதிகரிக்கும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது

Post a Comment

0 Comments