Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,441பேர் கொவிட் பாதிப்பு- 13 பேர் உயிரிழப்பு!

 


கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 441பேர் பாதிக்கப்பட்டதோடு 13பேர் உயிரிழந்துள்ளனர்.


உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13 இலட்சத்து 99ஆயிரத்து 716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25ஆயிரத்து 886 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது வரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 18 ஆயிரத்து 411பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 795பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 13இலட்சத்து 55ஆயிரத்து 419பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Post a Comment

0 Comments