Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

14 ஆம் திகதிக்கு பின்னரும் பயணத் தடை? இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள தகவல்!

 


நாடளாவிய ரீதியில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று காலை தென்னிலங்கை ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இன்று காலை வரையில் எவ்வித அறிவுறுத்தலும் வரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே 14 ஆம் திகதிக்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதால் தேவை ஏற்படின் பயணத் தடையை நடைமுறைப்படுத்த முடியும் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments