அமெரிக்காவை எமது கண் முன்னே சீனா அழிவித்துவிட்டது என்று அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நோர்த் கரோலினாவில் நடந்த குடியரசு கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர்,
நான் வைத்த குற்றச்சாட்டுகள் உண்மையாகிவிட்டது. சீனாதான் கொரோனாவை உருவாக்கியதாக இப்போது பலரும் சந்தேகம் அடைந்துள்ளனர். உலக நாடுகளுக்கு கொரோனாவை பரப்பியதற்காக சீனா 10 டிரில்லியன் டொலர் பணத்தை மற்ற நாடுகளுக்கு கொடுக்க வேண்டும்.
இந்த பேரிடரை உருவாக்கியதற்காக உலக நாடுகளிடம் சீனா மன்னிப்பு கேட்க வேண்டும். உலக நாடுகளுக்கு உரிய இழப்பீட்டை சீனா கொடுக்க வேண்டும். சீனாவிடம் கடன் வாங்கி இருக்கும் நாடுகள் அதை திருப்பி கொடுக்க கூடாது.
சீனாவிடம் எந்த நாடு எவ்வளவு கடன் வாங்கி இருந்தாலும் அதை திருப்பி கொடுக்க கூடாது. சீனாவில் உலகிற்கு ஏற்பட்ட பாதிப்பு மிக மிக அதிகம். இதை இழப்பீடுகள் மூலம் சரி செய்ய முடியாது. உலக நாடுகளுக்கு எல்லாம் சீனா கடன் பட்டு இருக்கிறது.
பல உலகை சீனா அழித்துவிட்டது. நமக்கு எதிராக அமெரிக்க அதிபரின் சுகாதார ஆலோசகர் ஆண்டனி பவுச்சி செயல்பட்டார். அவர் வலதுசாரிகளின் எதிரி. நான் சொன்னது சரி. கொரோனாவின் தொடக்கம் முதலே அதை பற்றி நான் சரியாக கணித்து இருந்தேன். நமது நாட்டை நம் கண் முன்னே அழித்துவிட்டனர்.
சீனாவிற்கு அடிபணியும் அரசாக பிடன் அரசு உள்ளது. உலக நாடுகளுக்கு முன் நாம் அவமானப்பட்டு நிற்கிறோம். மீண்டும் குடியரசு கட்சியினரை எல்லா தளங்களிலும் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
2022ல் நடக்க உள்ள மிட் டேர்ம் தேர்தல் தொடங்கி அனைத்திலும் நாம் வெல்ல வேண்டும். நமது எல்லைகள் பாதுகாப்பாக இல்லை. பல வெளிநாட்டு மக்கள் முறைகேடாக அமெரிக்காவிற்கும் குடியிருக்கிறார்கள்.
விலைவாசி உயர்கிறது. சைபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஆனால் பிடன் இதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை, சொந்த நாட்டு மக்களை ஆதரிப்பதை விட்டுவிட்டு அந்நிய நாட்டு குழந்தைகளை அவர் ஆதரிக்கிறார், என்று கடுமையாக பேசியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த பின் ட்ரம்ப் பெரிதாக பொது இடங்களில் தலை காட்டாமல் இருந்தார். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தவர் தற்போது மீண்டும் வெளியே தலைகாட்ட தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments