Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

எரிபொருள் விலை ஏற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாட்டு வண்டியில் பயணித்த 04பேர் கைது...!!

 


நாட்டில் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாட்டு வண்டியில் காலி நகருக்கு பிரவேசித்த நான்கு பேரை, காலி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுள், காலி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஒருவரின் மகனும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாட்டை மீறிய குற்றச்சாட்டில், காலி காவல்துறையின் நடமாடும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரால், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக, காலியில் உள்ள நபர் ஒருவரிடமிருந்து, குறித்த மாட்டு வண்டியை அவர்கள் வாடகைக்கு பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments