Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மாவட்டங்களுக்கு இடையேயும் பயணக்கட்டுப்பாடுகள்?

 


நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொண்டு தேவைப்பட்டால் எதிர்காலத்தில் மாவட்டங்களுக்கு இடையேயும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு இருப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை அடுத்து இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நேற்றையதினம் சுகாதார அதிகாரிகளுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடத்திய கலந்துரையாடல்களை அடுத்து எதிர்வரும் 30ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments