Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொலம்பியாவில் வெடித்தது மக்கள் போராட்டம்! வெளியாகிய அதிர்சித் தகவல்

 


தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள வரிச் சீர்திருத்தத்திற்கு எதிராக கடந்த ஒன்பது நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களில் மொத்தம் 379 பேர் காணாமல்போயுள்ளனர்.

அத்துடன் இதன் விளைவாக குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக் கணக்கானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியுள்ளன.

அதேநேரம் இச் சம்பவம் அமெரிக்க அரசாங்கத்திடமிருந்தும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தும் கவலைக்குரிய அறிக்கைகளைத் தூண்டியுள்ளது. 51 பேருக்கான தேடல்கள் நடந்து வருகின்றன, 38 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டங்களின் விளைவாக 352 பொதுமக்கள் மற்றும் 38 சட்ட அமலாக்க அதிகாரிகள் காயமடைந்ததாக கொலம்பியாவின் ஒம்புட்ஸ்மேன் அலுவலகத்தின் சமீபத்திய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட வரி சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக எரிவாயு விலைகள் மற்றும் பயன்பாட்டு கட்டணங்களை அதிகரிப்பதை எதிர்த்து கொலம்பியாவில் பேரணிகள் ஏப்ரல் 28 முதல் நடந்து வருகின்றன.

சர்ச்சைக்குரிய சீர்திருத்தத்தை ஜனாதிபதி இவான் டியூக் ஞாயிற்றுக்கிழமை வாபஸ் பெற்ற போதிலும், எதிர்ப்பாளர்கள் நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.


Gallery

Post a Comment

0 Comments