காத்தான்குடியில் 70 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் 25 வயது இளைஞர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து சுற்றிவளைத்த நிலையில் சோதனையிட்டபோது குறித்த நபரின் உடைமையில் இருந்து இக் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதானவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
0 Comments