Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அரச ஊழியர்களுக்கு நற் செய்தி!

 


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில், அனைத்து அரச நிறுவனங்களிலும் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களுடன் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், இதுகுறித்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதன்போது கர்ப்பிணிகளாகவுள்ள ஊழியர்களை கடமைக்கு அழைத்துக்கொள்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பான சுற்றுநிருபம் நாளை வெளியிடப்படும் என அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments