Home » » கையை விரித்தது தடுப்பூசி நிறுவனம்! சிக்கலில் இலங்கை அரசு

கையை விரித்தது தடுப்பூசி நிறுவனம்! சிக்கலில் இலங்கை அரசு

 


இந்தியாவின் சேரம் நிறுவனத்திடமிருந்து அஸ்ராசெனகா தடுப்பூசி வருவது நிச்சயமற்றதாகிவிட்ட நிலையில் ஏனைய நாடுகளிடமிருந்து அஸ்ரா செனகா தடுப்பூசியை பெறுவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இரண்டாவது டோஸிற்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அரசாங்கம் குறிப்பிட்ட தடுப்பூசியை வைத்துள்ள நாடுகளை தொடர்புகொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

அஸ்ரா செனகா தடுப்பூசி மேலதிகமாக உள்ள தென்கொரியா, அமெரிக்கா, நோர்வே உட்பட பல நாடுகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

நாங்கள் இந்த நாடுகளின் முகவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம், விரைவில், இரண்டாவது டோஸிற்கான மருந்தினை பெற்றுக்கொள்ளமுடியும்.

இந்தியாவில் காணப்படும் நிலவரம் காரணமாக சேரம் நிறுவனத்தினால் ஏற்றுக்கொண்டபடி தடுப்பூசியை வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது டோஸினை வழங்குவதற்கு இலங்கைக்கு 600,000 அஸ்ராசெனகா தடுப்பூசி அவசியமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |