Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நினைவு கூர்ந்தமைக்காக ஒருவர் கைது!

 


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நினைவு கூர்ந்தமைக்காக மட்டக்களப்பு கல்குடா பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இறுதி போரின்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்காலை நினைவு தினம் தமிழர்களினால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் அவர்கள்  விடுதலைப் புலிகள் அமைப்பின் எந்த உறுப்பினர்களையும் நினைவுகூருவதற்கு மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அந்தவகையில் பிரபாகரனின் மரணத்தை நினைவுகூரும் நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக 38 வயது ஒருவரை கல்குடா பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments