Advertisement

Responsive Advertisement

அத்தியாவசிய உணவுப் பொருட்களை சேமித்து வையுங்கள்! சவேந்திர சில்வா அறிவித்தல்

 


பயணத் தடை விதிக்கப்படவுள்ளமையினால் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வீட்டில் சேமித்து வைக்குமாறு இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவுறுத்தியுள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து வைத்துக் கொள்ளுங்கள் என நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்நிலையில் ஒருவாரகால பயணத் தடை விதிக்கப்படும்.

எனவே வீடுகளில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். பயணக்கட்டுப்பாட்டுக் காலத்தில் தேவையின்றி வீதிகளில் யாரும் பயணிக்க கூடாது.

வெளியில் இருந்து வருபவர்களை வீடுகளில் வைத்துக் கொள்ளக் கூடாது. இப் பயணக் கட்டுப்பாடானது கொவிட் தொற்றுப் பரவுவதை தடுப்பதற்கு உதவும் என சுகாதார துறையினர் வலியுறுத்தியிருப்பதாகவும் இதனடிப்படையில் ஐனாதிபதியின் பரிந்துரையின் பேரில் இப் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

Post a Comment

0 Comments