எதிர்வரும் 25ஆம் திகதி பயணத் தடை சில மணித்தியாலங்கள் நீக்கப்பட்டாலும் மிகவும் அருகாமையில் உள்ள கடைகளுக்கு மட்டுமே செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மட்டும் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற முடியும் எனவும் அவ்வாறு வெளியேறினாலும் மிகவும் அருகாமையில உள்ள கடைகளுக்கு மட்டுமே செல்ல முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் பொருட்களை கொள்வனவு செய்து கொள்ள முடியாதவர்களுக்காகவே இந்த பயணத் தடை நீக்கப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் 25ஆம் திகதி அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments