Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் அடையாளங் காணப்பட்ட கருப்பு பூஞ்சை நோயாளர்கள் 24 பேரும் கொரோனா தொற்றாளர்களா?: வைத்தியர் விளக்கம்

 


கருப்பு பூஞ்சை நோய் என்பது இலங்கைக்கு புதிதானதல்ல. இவ்வாண்டில் இதுவரையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 24 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள போதிலும் அவர்களில் யாரும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர் அல்ல என்று பூஞ்சை நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ப்ரீமாலி ஜயசேகர தெரிவித்தார்.


இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்நோய் தொடர்பில் மக்கள் வீண் அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்றும் , இதற்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான சகல மருந்துகளும் இலங்கையில் காணப்படுவதாகவும் வைத்திய நிபுணர் ப்ரீமாலி ஜயசேகர மேலும் சுட்டிக்காட்டினார்.

Post a Comment

0 Comments