உலக திருமதி அழகுராணிப் போட்டியில் முதலிடத்தை வென்ற கரொலின் ஜுரி, தனது மகுடத்தை மீளளிக்கப் போவதாக பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை அவர் தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் சிறப்பு காணொளி ஒன்றைப் பதிவிட்டு தெரிவித்திருக்கின்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 4ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற உலக திருமதி அழகுராணிப் போட்டியில் மகுடம் வென்ற புஷ்பிக்காவின் கிரீடத்தை திரும்பப் பெற்ற சர்ச்சையில் கரொலின் சிக்கியிருந்தார்.
இதுகுறித்த விசாரணையிலும் அவர் கைதுசெய்யப்பட்டு பின் பொலிஸ் பிணையில் விடுதலையாகினார்.
புஷ்பிக்காவுடன் பொலிஸார் செய்த சமரச முயற்சியும் தோல்வியடைந்ததோடு பகிரங்க ஊடக சந்திப்பை நடத்தி மன்னிப்பு கேட்பதற்கான கோரிக்கையையும் கரொலின் ஜுரி நிராகரித்திருந்தார்.
இந்த நிலையில்தான் அவர் தனது முகநூலின் ஊடாக இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டிருக்கின்றார்.
0 Comments