நான்கு தனியார் நிறுவனங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு சேமிக்கப்பட்டு உள்ள தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் “அப்லாரொக்ஸின்” வேதிப்பொருள் கலந்திருப்பது இரண்டாவது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்பு பிரிவு மற்றும் இலங்கை தர நிர்ணய நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன் நடத்திய சோதனைகளில் தேங்காய் எண்ணெயில் “அப்லாரொக்ஸின்” இருப்பதை உறுதிப்படுத்தி இருந்தன.
இது பின்னர் தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனத்தால் தர சோதனை செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அந்த வகையில் சேமிக்கப்பட்டு உள்ள தேங்காய் எண்ணெயில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் சோதனை முடிவுகளை தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் இன்று (01) நுகர்வோர் விவகார ஆணையத்திற்கு அனுப்பியது.
தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனத்தின் தரக் கட்டுப்பாடும் “அப்லாரொக்ஸின்” இருப்பதை உறுதிப்படுத்தியதாகவும், அதன் முடிவுகள் என்னவாக இருந்தாலும், குறித்த தேங்காய் எண்ணெயை மீண்டும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் மேம்பாடு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் லசந்த அலகியவண்ண ' தெரிவித்தார்
0 Comments