Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி அபிமானி வர்த்தக கண்காட்சி காரைதீவில்


 (எம்.ஐ.எம்.அஸ்ஹர்)


சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி பயனாளிகளை உட்சாகப்படுத்தும்  முகமாக காரைதீவு மற்றும் நிந்தவூர் பிரதேச செயலகங்களுக்குட்பட்ட சமுர்த்தி வங்கிகளின் அனுசரணையுடன் "சமுர்த்தி அபிமானி வர்த்தக கண்காட்சி "  காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய கபடா வளாகம் மற்றும் காரைதீவு வைத்தியசாலை வளாகத்தில் இன்றும் நாளையும்  காலை 8.30 தொடக்கம் மாலை 7.30 வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையிட்டு இன்று (07)  உத்தியோகபூர்வமாக  பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு வேதநாயகம் ஜெகதீசன் அவர்களும், அதிதிகளாக நிந்தவூர் பிரதேச செயலாளர் ஜனாப் எம்.ரி.எம் . அன்சார் அவர்களும், காரைதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திரு எஸ்.பார்த்திபன் அவர்களும் மற்றும் காரைதீவு, நிந்தவூர் பிரதேச செயலக சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர்கள், திட்ட முகாமையாளர்கள், வங்கி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.


இதன்போது புதிய இளம் தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் வழங்கல் நிகழ்வும், பயனாளிகளுக்கான நிவாரண கொடுப்பனவு வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றது.

Post a Comment

0 Comments