Home » » சுகா­தார வழி­காட்­டல்­களைப் பின்­பற்றத் தவறும் பள்­ளி­வா­சல்­கள் தற்காலிகமாக மூடப்படும்! புதிய தீர்மானம்

சுகா­தார வழி­காட்­டல்­களைப் பின்­பற்றத் தவறும் பள்­ளி­வா­சல்­கள் தற்காலிகமாக மூடப்படும்! புதிய தீர்மானம்

 


கொவிட் 19 செய­லணி மற்றும் சுகாதார அமைச்சு வழங்­கி­யுள்ள சுகா­தார வழி­காட்­டல்­களைப் பின்­பற்றத் தவறும் பள்­ளி­வா­சல்­களை நோன்பு முடியும்­வரை மூடி­வி­டு­வ­தற்கு வக்பு சபை தீர்­மா­னித்­துள்­ளது.

நாட்டின் பல பகு­தி­களில் அநே­க­மான பள்ளிவாசல்களில் கொவிட் 19 தொடர்­பான சுகா­தார வழி­காட்­டல்கள் மீறப்­ப­டு­வ­தா­கவும் பெரும் எண்­ணிக்­கையானோர் பள்­ளி­வா­சல்­க­ளுக்குள் சுகா­தார வழி­காட்­டல்­களை அசட்டை செய்­வ­தாகவும் வக்பு சபைக்கு ஆதா­ரங்­க­ளுடன் முறை­பா­டு­களை முன்­வைத்­தி­ருப்­ப­த­னாலேயே இவ்­வா­றான தீர்­மா­ன­மொன்றை மேற்­கொள்ள வேண்­டி­யேற்­பட்­டுள்­ள­தாக வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தெரி­வித்துள்ளார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில் “அண்­மையில் சுகா­தார அமைச்சு நோன்பு காலத்தில் பள்­ளி­வா­சல்­களில் சுகா­தார வழி­காட்­டல்கள் தொடர்பில் சுற்­றிக்­கை­யொன்­றை வெளி­யிட்­டி­ருந்­தது.

அவ்­வ­றிக்­கையில் பள்­ளி­வா­சல்­களில் ஜமாஅத் தொழு­கை­களில் 100 பேருக்கு உட்­பட்­ட­வர்­களே தொழ முடியும். ஒவ்­வொ­ரு­வரும் வீட்­டி­லி­ருந்து முஸல்­லாக்­களை எடுத்து வர வேண்டும். வீடு­க­ளிலே வுழூச் செய்து வர­வேண்டும்.

ஒவ்­வொ­ரு­வரும் மாஸ்க் அணிந்­தி­ருக்­க ­வேண்டும்.ஒரு மீற்றர் இடை­வெளி பேணப்­ப­ட­வேண்டும். பள்­ளி­வா­ச­லுக்குள் நுழையும் ஒவ்­வொ­ரு­வ­ரதும் உடல் உஷ்ண நிலை சோதிக்­கப்­ப­ட­வேண்டும் என்பன உட்­பட பல நிபந்­த­னைகள் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தன.

ஆனால் இவை­களில் எவையும் பின் ­பற்­றப்­ப­டு­வ­தில்லை என வக்பு சபைக்கு முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. கஞ்சி விவ­கா­ரமும் சுற்­ற­றிக்­கை­யின்­படி பேணப்­ப­டு­வ­தில்லையென குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. கஞ்சி பள்­ளி­வா­ச­லுக்கு வெளியே வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென சுற்­ற­றிக்­கையில் தெரி­விக்கப்பட்டுள்ளது. இவ்­வி­வ­கா­ரமும் பின்­பற்­றப்­ப­டாது அலட்­சியம் செய்­யப்­பட்­டுள்­ளது.

இதற்­கான ஆதா­ரங்கள் புகைப்­ப­டங்கள் மூலம் வக்பு சபைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன. இவ்­வா­றான சூழ்­நி­லையில் நாட்டில் கொவிட் 19 மூன்­றா­வது அலை உரு­வாக cஉஉ கார­ண­மாக இருந்­தது என்ற குற்­றச்­சாட்டு எம்­மீது சுமத்­தப்­ப­டலாம்.

அதனால் பள்­ளி­வா­சல்கள் நோன்பு காலத்தில் வழங்­கப்­பட்­டுள்ள சுகா­தார வழி­காட்­டல்­களை முழு­மை­யாக கண்­டிப்­பாக பின்­பற்­ற­வேண்டும். பள்­ளி­வா­சல்­களில் சுகா­தார வழி­காட்­டல்கள் மீறப்­ப­டு­கின்­ற­மைக்கு பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­களே பொறுப்புக் கூற­வேண்டும். இவ்­வா­றான நிலையில் வக்­பு­சபை குறிப்­பிட்ட பள்­ளி­வா­சல்­களை மூடாமல் இருப்­ப­தற்­காக வக்பு சபைக்கு அனை­வரும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |