Advertisement

Responsive Advertisement

அக்கரைப்பற்றில் வீதி மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது..!




மாளிகைக்காடு நிருபர்


உள்ளூராட்சி அபிவிருத்தி வலுவூட்டும் திட்டத்தின் கீழ் மக்களின் நீண்டகால கோரிக்கையின்  அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட அக்கரைப்பற்று காதர் ஓடாவியார் வீதி சனிக்கிழமை (17) நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்த அக்கரைப்பற்று முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகியினால் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.

அக்கரைப்பற்று மாநகர  சபை  உறுப்பினர் ஏ.சீ.பதுறுதீன் மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் என்.எம். நஜிமுதீன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்ட அக்கரைப்பற்று மாநகர   சபை  ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி குறித்த வீதியின் பெயர்ப்பலகையினை திரை நீக்கம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்கள், சபை உத்தியோகத்தர்கள், உலமாக்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், பொதுமக்கள் என மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments