மறைந்த பிரபல நடிகரும் சமூக ஆர்வலருமான சின்னக் கலைவாணர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.
விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டிலிருந்து ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்ட அவரது உடல் மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இறுதி நிகழ்வில், விவேக்கின் கலை மற்றும் சமூகப் பணிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை செலுத்தப்பட்டுள்ளதுடன் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன் பின்னர், விவேக்கின் உடலுக்கு அவரது மகள் இறுதிச் சடங்குகளைச் செய்ததுடன் உடல், மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது.
0 Comments