Home » » முன்னாள் பிரதேச செயலாளர் க.லவநதன் அகரம் அமைப்பு இரங்கல் செய்தியில் தெரிவிப்பு

முன்னாள் பிரதேச செயலாளர் க.லவநதன் அகரம் அமைப்பு இரங்கல் செய்தியில் தெரிவிப்பு

 


கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படவேண்டும் என்பதில் அக்கறையுடன் செயற்பட்டவர் -முன்னாள் பிரதேச செயலாளர் க.லவநதன் அகரம் அமைப்பு இரங்கல் செய்தியில் தெரிவிப்பு

கல்முனை வடக்கு பிரதேச செயகத்தின் முன்னாள் பிரதேச செயலாளர் கந்தையா லவநாதன் திடீர் சுகவீனம் காரணமாக தனது 48 ஆவது வயதில் நேற்று வியாழக்கிழமை இரவு இயற்கையெய்தினார். அவரது மறைவு பிரதேச  தமிழ் மக்கள் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னாள் பிரதேச செயலாளர் கந்தையா லவநாதன் தமிழனத்திற்கு ஆற்றிய பணிகள் என்றும் காலத்தால் அழியாதவை என அம்பாறை பாண்டிருப்பை தளமாகக்கொண்டு இயங்கிவரும் அகரம் சமுக அமையம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது.
அகரம் அமைப்பின் தலைவர் செ.துஜியந்தன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளதாவது.

மட்டக்களப்பு குருமண்வெளியை பிறப்pடமாகவும் மட்டு நகரை வசிப்பிடமாகவும் கொண்ட மறைந்த பிரதேச செயலாளர் கந்தையா லவநாதன் மக்களை நேசிக்கும் மனிதாபிமானம் மிக்க சேவையாளராவார். கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படவேண்டும் என்பதில் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் அர்ப்பணிப்புடன் முன்னெடுத்தவர். கல்முனை வடக்கில் இவர் கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக கடமையாற்றியுள்ளார். இவரது சிறந்த நிர்வாகத்திறன் ஆளுமை காரணமாக பிரதேச செயலக உத்தியோகத்தர்களது கட்டமைப்பும், மக்கள்பணியும்  சிறப்பாக நடைபெற்றது. 

பிரதேச செயலகத்தில் கலாசார விழா ஒன்றை ஏற்பாடு செய்து பிரதேச தமிழ் மக்களின் ஆவணங்கள் அடங்கிய விழா மலர் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அத்துடன் பிரதேச வளாகத்தில் இந்து ஆலயம் ஒன்றை உருவாக்கவும், கல்முனை தமிழ் மக்களின் இருப்பை பாதுகாக்கவும் தனது முழுப்பங்களிப்பையும் நல்கியவர். அவரது ;காலப்பகுதி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பொற்காலம் என்றே கூறவேண்டும்.

மறைந்த பிரதேச செயலாளர் க.லவநாதன் தமிழ் மக்களால் மட்டுமல்ல இங்குள்ள முஸ்லிம் மக்களாலும் நேசிக்கப்பட்ட சிறந்த நிர்வாகியாக திகழ்ந்தார். கல்முனைப் பிரதேசத்தில் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமைக்கும், உறவுக்கும் பாலமாகத் திகழ்ந்தவர். பதவி, அதிகாரங்களுக்கு அப்பால் எல்லோரிடமும் அன்பாக பழகும் எளிமையான குணம் கொண்டவராக அமரர் லவநாதன் திகழ்ந்தார். அன்னாரது மறைவுச் செய்தி கேட்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பரிவில் வசிக்கும் மக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்த மனநிலையில் ஆழ்ந்த துக்கத்தில் முழ்கியுள்ளனர். அன்னாரது ஆத்மா இறைசாந்தியடை எமது அகரம் அமைப்பு பிராத்திக்கின்றது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |