Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

டெல்லியில் ஒரே மருத்துவமனையில் பணியாற்றும் 37 மருத்துவர்களுக்கு கொரோனா

 


டெல்லி கங்காராம் மருத்துவமனையில் 37 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

டெல்லியில் கொரோனா தொற்று எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

டெல்லியில் இன்று 7,437 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் டெல்லி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

115 தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத ஐசியு மற்றும் விடுதி படுக்கைகளை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒதுக்கும்படி அரசு கேட்டுள்ளது.

இதற்கிடையில் சேர்ர் கங்காராம் மருத்துவமனையில் பணிபுரியும் 37 டாக்டர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Post a Comment

0 Comments