Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

 


சித்திரை புத்தாண்டு காலத்தில் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

"பிலவ" வருட தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு காலத்தில் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.

நாடளாவியரீதியில் கொரோனா தொற்று தொடர்பான அச்சஉணர்வு முழுமையாக நீங்காத நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் கொரோனா பரவலை கருத்திற்கொண்டு மக்கள் மிகுந்த அவதானத்துடனும், பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைவடைந்து வரும் நிலை காணப்பட்டாலும், தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு காலங்களில் அதிக சன நெரிசல் காணப்படுவதனால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி செயற்படுமாறு வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments