Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் எப்போது வேண்டுமானாலும் கொரோனா கொத்தணிகள் உருவாகும் ஆபத்து உள்ளது!

 


இலங்கையில் எப்போது வேண்டுமானாலும் புதிய கொரோனா கொத்தணிகள் உருவாக வாய்ப்பு உள்ளது. சமூகத்தில் வைரஸ் பரவுவதற்கான ஆபத்து இன்னும் உள்ளது, எதுவும் நடக்கலாம் என்று தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர எச்சரித்துள்ளார்.

தற்போது இலங்கை தினமும் சுமார் 100 கொரோனா பாதிப்புக்களை அறிக்கையிடுவதாகவும், மக்களின் அலட்சியம் காரணமாக இந்த எண்ணிக்கை எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தை நெருங்கி வருகையில், மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் பகுதிகளிலும்,

சமூக தூரத்தை பராமரிப்பதில் மக்கள் சிரமப்படுகின்ற இடங்களிலும் கொரோனா பரவக்கூடும்.

ஆகையால், மக்கள் பண்டிகை காலத்திற்கு முன்னதாகவே தங்கள் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதும், வெளியில் செல்லும்போது சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுவதும் மிக முக்கியமானது என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

சுகாதார விதிகளுக்கு இணங்க மக்கள் செயல்பட்டால், நாடு விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என்றார்.

சினோபார்ம் கோவிட் தடுப்பூசி குறித்து கருத்துத் தெரிவித்த அவர்,

சினோபார்ம் கோவிட் தடுப்பூசி குறித்து சுகாதார அமைச்சின் நிபுணர் குழு கூடுதல் தரவுகளை இன்னும் பெறவில்லை, சம்பந்தப்பட்ட தரவுகள் சரியாக பகுப்பாய்வு செய்யப்பட்டவுடன் தடுப்பூசிக்கு குழு ஒப்புதல் அளிக்கப்படும்," என்று அவர் கூறினார்.

Post a Comment

0 Comments