Advertisement

Responsive Advertisement

கூடுதலான கட்டணங்களை அறவிடும் பஸ்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை!!

 


பண்டிகைக் காலத்தில் கூடுதலான கட்டணங்களை அறவிடும் பஸ்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது.


இந்த பஸ்களின் போக்குவரத்து அனுமதிப் பத்திரங்களும் ரத்து செய்ய்பபடவிருக்கின்றன. உரிய கட்டணத்தை விட கூடுதலான கட்டணங்களை அறவிடும் பஸ்கள் பற்றி தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்யவும் பயணிகளுக்கு தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் இலக்கம் 0112 860 860 என்பதாகும்.

புறக்கோட்டை - பஸ்தியன் மாவத்தை, கம்பஹா, கடவத்த, பியஹம, கட்டுநாயக்க, கடுவெல, நிட்டம்புவ, களுத்துறை, அளுத்கம, மத்துகம, ஹொரணை, பாணந்துறை, ஹோமாகம, நாவின்ன, பிலியந்தல ஆகிய பஸ்தரிப்பு நிலையங்களிலிருந்து தூர இடங்களுக்கான பஸ் சேவைகள் இடம்பெறவிருக்கின்றன. உரிய முறையில் பஸ் போக்குவரத்து இல்லாத பகுதிகள் பற்றி தொலைபேசி மூலம் முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம். தொலைபேசி இலக்கம் 0112 860 860 என்பதாகும்.

Post a Comment

0 Comments