காலி மாவட்டத்தில் 28 பாடசாலைகளைச் சேர்ந்த 43 மாணவர்கள் மற்றும் மூன்று ஆசிரியர்கள் கடந்த இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக காலி மாவட்டத்தின் பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் வெனுர கே. சிங்காரச்சி தெரிவித்தார்.
இதையடுத்து 41 மாணவர்கள் மற்றும் 102 ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் ரத்கம சுகாதாரப் பிரிவில் பதிவாகி உள்ளனர்.
மேலும், காலியில் இருந்து 4 மாணவர்கள் மற்றும் மூன்று ஆசிரியர்கள், உடுகம சுகாதார பிரிவைச் சேர்ந்த 5 மாணவர்கள், அம்பலாங்கொட மற்றும் பதேகம சுகாதார பிரிவுகளைச் சேர்ந்த தலா இரண்டு மாணவர்கள் தொறறுக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை காலி மாவட்டத்தில் உள்ள 28 பாடசாலைகளில் 27 ஆம் திகதி மட்டும் 29 மாணவர்கள் மற்றும் 03 ஆசிரியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட சுகாதார தொற்றுநோயியல் நிபுணர் மேலும் தெரிவித்தார்.
0 Comments