Home » » இலங்கை அதிபர் சேவை தரம் iii இற்கான ஆட்சேர்ப்பு

இலங்கை அதிபர் சேவை தரம் iii இற்கான ஆட்சேர்ப்பு

 


இலங்கை அதிபர் சேவை தரம் III இற்கு நேர்முகத் தேர்வை நடாத்தி பொருத்தமானவர்களைத் தெரிவு செய்து நியமனங்களை வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீககாரம் வழங்கியுள்ளது.

நேற்று (01) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எட்டப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

தற்போது இலங்கை அதிபர் சேவை I, II மற்றும் III தரங்களில் 4,600 வெற்றிடங்கள் காணப்படுவதுடன், தற்போது நாட்டில் நிலவும் கொவிட் நிலைமையால் போட்டிப்பரீட்சை அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வை நடாத்தி முறையாக பதவி நியமனங்களை வழங்குவதற்கு ஒரு வருடத்திற்கும் அதிகமான காலம் எடுக்கும் என அவதானிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, தற்போது நீண்டகாலமாக அதிபர் பதவியில் பதில் கடமைகளை மேற்கொள்ளும் ஆசிரியர் சேவையில் தகைமை பெற்ற உத்தியோகத்தர்களுக்கும் சேவை யாப்பிற்கமைய தகைமைகளைப் பூர்த்தி செய்யும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் சேவையிலுள்ள ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் வாய்ப்புக்களை வழங்கி இச்சந்தர்ப்பத்தில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் போட்டிப் பரீட்சையை நடாத்துவதற்குப் பதிலாக ஒழுங்கமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வை நடாத்தி பொருத்தமானவர்களைத் தெரிவு செய்வதற்காவும், இலங்கை அதிபர் சேவை தரம் III இற்கான நியமனங்களை வழங்குவதற்காக, கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.n

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |