Home » » Fwd: ( திகாமடுல்ல நிருபர் - ஸஹிரியன் பிரிமியர் லீக் ( ZPL ) சீசன் 2 கிறிக்கட் சுற்றுப் போட்டி

Fwd: ( திகாமடுல்ல நிருபர் - ஸஹிரியன் பிரிமியர் லீக் ( ZPL ) சீசன் 2 கிறிக்கட் சுற்றுப் போட்டி

 


(  எம்.ஐ.எம்.அஸ்ஹர்- எம்.எம்.ஜெஸ்மின் ) 


 கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான ” ஸஹிரியன் பழைய நண்பர்கள் ஒன்றியம் ( Zahirian Old Friends Association ) ( SOFA) கடந்த வருடம்  ஏப்ரல் விடுமுறையின் போது  ஒழுங்கு செய்திருந்த  ஸஹிரியன் பிரிமியர் லீக் ( ZPL )  சீசன் 2 கிறிக்கட் சுற்றுப் போட்டி நாட்டில நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக  ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இச்சுற்றுப் போட்டியினை மீண்டும் இவ்வருடம் மே மாத நடுப்பகுதில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 மெற்றோபொலிடன் கல்லூரியின் அனுசரணையில் மிகப்பிரமாண்டமான முறையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மேற்படி சுற்றுப் போட்டியில்   இலங்கையின் பல பாகங்களிலும் வாழும் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் கல்விகற்ற பழைய மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
  

 இப் போட்டித் தொடர் இவ்வருடம் மே மாத நடுப்பகுதியில்   சுகாதார வழிமுறைகளுக்கமைய கல்முனை ஸாஹிரா தேவியக்கல்லூரி மைதானத்தில் நொக்கட் முறையில் அணிக்கு 11 பேர் கொண்ட 8 ஓவர்கள் கொண்டதாக  .இடம்பெறவுள்ளது..
மஞ்சள் ( YELLOW ) குழுவில்  ஸஹிரியன் 90 அணி , உஸ்பா 91 அணி , ஸஹிரியன் 92 அணி , ஸஹிரியன் 90 ” ஸ் அணி , நொட் அவுட் 92 அணி , பவர் பிளேர்ஸ் 96 அணி , சுப்பர் ஹீரோஸ் 97 அணி , ஸஹிரியன் 98 அணி ஆகியனவும் ,  பச்சை ( GREEN ) குழுவில் ஸெஸ்டோ 99 அணி , ஸஹிரியன் வை 2 கே அணி , கிளசிக்கல் சீரோ வன் அணி , யுனைடெட்  ஸஹிரியன் 2 ஓ அணி , பும் பும் ஸஹிரியன் அணி , அலியார் ரெஜிமென்ட் அணி , பெச் ஓ  5 அணி  ஆகியனவும் , சிவப்பு ( RED ) குழுவில் ஸஹிரியன் லயன்ஸ் அணி , சுப்பர் வொரியஸ் அணி, கஜபா 08 அணி , கிறிக் 90 அணி , 91  மெட்ஸ் ( குழுமம்) அணி , ரீம் 92 அணி , மெக்ஸ் சாஜர்ஸ் அணி ஆகியனவும் , நீல ( BLUE )  குழுவில் கிளாஸ் ஒப் தேர்டீன்( 13 ) அணி , லெஜன்ஸ் ஒப் ஸாஹிரியன்  அணி , ஸஹிரியன் விக்கின்ஸ் அணி , 16 ஸஹிரியன்ஸ் , ஸஹிரியன் வொல்வ்ஸ்  அணி , ரீம் ( Team ) 99 அணி , ரீம் 2 கே ( Team 2 K ) அணி ஆகியன பங்கேற்கவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |