Advertisement

Responsive Advertisement

உள்ளக விளையாட்டரங்கம் மிகச் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டு திறந்து வைப்பு


(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)


கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் உடற்கல்வி பயிற்றுவிப்பாளர் ஏ.எம்.இர்ஷாத்துடைய முயற்சியினால் உள்ளக விளையாட்டரங்கம் மிகச் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை மாணவர்கள் பயன்பெறும் வகையில் திறந்துவைக்கப்பட்டது.  
பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.அஸ்மி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி  நிகழ்வில்  கல்முனை கல்வி வலயத்தின் உடற்கல்வி  உதவிக் கல்விப் பணிப்பாளர் முஹம்மட் சாஜித்  கலந்து கொண்டு உள்ளக விளையாட்டு அரங்கத்தை திறந்துவைத்தார். 
இந்த அடிப்படையில்இப்பாடசாலையில்  மைதானம் இல்லாத குறையை மாணவர்கள் உள்ளக விளையாட்டரங்கத்தைப் பயன்படுத்தி உடற்கல்வி செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தனி முயற்சியால் உள்ளக விளையாட்டு அரங்கத்தை  மாணவர்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கிய உடற்கல்வி பயிற்றுவிப்பாளர் ஏ.எம். பவாஸ்(இர்ஷாத்) அவர்களுக்கு அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் ச நன்றிகளையம் பாராட்டுக்களையும்  தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments