Advertisement

Responsive Advertisement

வளமான நாடொன்றில் வளமான நாளையொன்றிற்காக அர்ப்பணிப்போம்


 எம்.ஐ.எம்.அஸ்ஹர்)


"வளமான நாடொன்றில் வளமான நாளையொன்றிற்காக அர்ப்பணிப்போம்" எனும் தொனிப்பொருளில் தேசிய நிகழ்வாக மாவட்ட  ரீதியில் இடம்பெற்று வரும் அகில இலங்கை சமூர்த்தி உத்தியோகத்தர் சங்க மாநாடு அண்மையில் வவுனியா மாவட்ட செயலக புதிய கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது. 

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் பங்கேற்போடு இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சமூர்த்தி சங்கத்தின் செயலாளருமான கௌரவ ஜெகத் குமார, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ குலசிங்கம் திலீபன், சமூர்த்தி சங்கத்தின் தலைவர் கே.கீர்த்ஸ்ரீ, வவுனியா மாவட்ட சமூர்த்தி சங்கத்தின் தலைவர் எஸ். சம்பத், வவுனியா மாவட்ட சமூர்த்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் குறித்த மாநாட்டில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments