Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தென்னை மரத்தை வெட்டினால் தண்டனை வழங்கப்படும்!

 


இலங்கையில் மரங்களை வெட்டுவதற்கெதிராக உள்ள சட்டத்தில் புதிய சரமொன்றை இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளது.


அந்த வகையில் தென்னை மரத்தை வெட்டினால் தண்டனை வழங்குவதற்கான திருத்தம் கொண்டு வரப்படவிருப்பதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

கம்பஹா – நைவல பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

அண்மைய நாட்களாக தேங்காய் விலை அதிகரித்துச் சென்றமை, கட்டிட மற்றும் இதர தேவைகளுக்காக தென்னை மரங்களை வெட்டும் நடவடிக்கை அதிகரித்துள்ளமை போன்ற விடயங்களை அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments