இலங்கையில் தற்போது அச்சுக் கடதாசிக்கான தட்டுப்பாடு நிலவிவருகின்றது.
இலங்கை அச்சகச் சங்கத்தின் தலைவரான டிலான் சில்வா இதனைத் தெரிவித்தார்.
கடதாசிக்காக செலவிடுகின்ற செலவீனம் தற்போது 30 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாக குறிப்பிட்ட அவர், இறக்குமதி கட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதிலும் கடதாசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
சீனா, இந்தியா, கொரியா மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இலங்கை அதிகளவு அச்சுக் கடதாசிகளை இறக்குமதி செய்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments: