(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலகங்களை இணைத்து 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகளை செயற்படுத்துவது தொடர்பாக சமூர்த்தி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் கடந்த சனிக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் பிரதேசச் செயலகக் கேட்போர் கூடத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த வேலைத்திட்டத்தின் பிரகாரம் செயற்படுத்தப்படவுள்ள பிரதான திட்டங்களாவன..
* இரண்டு இலட்சம் சமூர்த்தி பயனாளிக் குடும்பங்களை மையமாக கொண்ட முழுமையான மனைப் பொருளாதார மேம்பாடு.
* 25000 இளம் பெண் தொழில் முயற்சியாளர்களை இலக்கு வைத்து வர்த்தக வலையமைப்பினை மேம்படுத்தல்.
* 5000 சௌபாக்கியா உற்பத்தி மாதிரிக் கிராமங்களை வலுவூட்டல்.
* மின்சார வசதியில்லாத அனைத்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும் மின்சாரம் வழங்கல்.
போன்ற திட்டங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டன.
குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க.விமலநாதன், மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் திருமதி.ஜெயபவானி, சமூர்த்தி சிரேஷ்ட முகாமையாளர் திரு. யோகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்க
0 Comments