Advertisement

Responsive Advertisement

வாசிகசாலை ஒன்று ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு

 


எம்.ஐ.எம்.அஸ்ஹர்

சம்மாந்துறை கல்வி வலத்திற்குட் பட்ட  சம்மாந்துறை நெய்னாகாடு அல்-அக்ஸா வித்தியாலய மாணவர்களின் நன்மை கருதி அப்பாடசாலையில்  வாசிகசாலை ஒன்று ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று  அல்-அக்ஸா வித்தியாலயத்தில் இடம் பெற்றுள்ளது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம். மாஹிர்  கலந்து கொண்டதோடு, வித்தியாலய அதிபர் ஏ.பி. ஹிபத்துல்லா மற்றும் அல்-ஹாஜ் முஹமட் ரீஷா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் தனிப்பட்ட பங்களிப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள இவ் வாசிகசாலையில் மாணவர்களின் பத்திரிகை மற்றும் புத்தக  வாசிப்புத்திறனை ஊக்குவித்து அவர்களின் உலக அறிவை மேம்படுத்தும் முகமாக தினசரி பத்திரிகைகள் மற்றும் பயனுள்ள புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன

Post a Comment

0 Comments