Advertisement

Responsive Advertisement

திருக்கோவில் கருணாலயம் ஸ்ரீ சீரடிசாய்நாதரின் ஒலிப்பேழை வெளியீடு மகாகும்பாவிஷேகமும்

 




செ.துஜியந்தன்

அம்பாறை திருக்கோவில் பிரதேசம் தாமரைக்குளம் எனும் இடத்தில் அமைந்துள்ள ஷீரடிசாய் நாதரின் கருணாலயத்தின் மீது பாடப்பெற்ற ஷீரடிசாய் கருணாலய கீதங்கள் பாடல் இசை தொகுப்பு வெளியீட்டு விழா ஷீரடி கருணாலயத்தில் ஷீரடி பக்தரான திருமதி சீதா விவேக் தலைமையில் நடைபெற்றது.




இவ் இசைத் தொகுப்பில் ஷீரடி சாய்நாதரின் புகழ்பாடும் ஐந்து பாடல்கள் அடங்கியுள்ளது. பாடல்களுக்கான வரிகளை திருமதி சீதா விவேக் மற்றும் நிறோஷ் ஞானச்செல்வன் ஆகியோர் எழுதியுள்ளனர். 

பாடலுக்கான இசையினை இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் வழங்கியுள்ளார். தாள வாத்தியம் சிவசக்தி பவன். பாடல்களை என்.ரகுநாதன், கந்தப்பு ஜெயந்தன், பிரதா கந்தப்பு, கந்தப்பு ஜெயரூபன் ஆகியோர் பாடியுள்ளனர். அறிமுக உரையினை ஐங்கரமுத்து யோகநாதன் வழங்கியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் மிகப்பிரமாண்டமான முறையில் ஷீரடி சாய்நாதருக்கு கருணாலயம் அமையப்பெற்றுள்ளது. இவ் ஆலயத்தின் மஹா குடமுழுக்கு கும்பாவிஷேகம் எதிர்வரும் 02 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 9மணி தொடக்கம் 10.30 மணிவரையுள்ள சுபமுகூர்த நாளில் நடைபெறவுள்ளது. 

பூர்வாங்க கிரியைகள் யாவும் 31 ஆம் திகதி முதல் நடைபெற்றுவருகின்றன.
ஷீரடிசாய் நாதருக்கு பக்தர்கள் தமது கரங்களால் பால் காப்பு சாத்தும் நிகழ்வு முதலாம் திகதி காலை 6 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஷீரடிசாய் கருணாலயத்தின்ட ஆதின தர்மகர்த்தா திருமதி சீதா விவேக் மேற்கொண்டுள்ளார். ஆலய கும்பாவிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேக பூசைகள் நடைபெறவுள்ளன.

இக் கருணாலயம் மூலம் சமய, சமூகப்பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments