(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
கிளிநொச்சி - பளை - இத்தாவில் பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் பயணித்த லொறியொன்றும் எதிரில் பயணித்த கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த 38 வயதுடைய குடும்பஸ்தரும் அவரின் 11 , 13 வயதுடைய புதல்வர்களும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தை அடுத்து லொறி சாரதி, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
0 Comments