Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்முனை விகாரைக்கு ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் பொதுக்கிணறு கையளிப்பு..!!!


அபு ஹின்ஸா


 கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை ஷிரி சுபாத்திராமா மகா விகாரைக்கு மிகவும் தேவைப்பாடாகவும் இன ஜக்கியத்திற்கு உந்துகோளாகவும்  காணப்பட்ட குடிநீர் பிரச்சினையினை கண்டறிய கடந்த இரண்டு வாரத்திற்கு முன் கல்முனை மாநகரசபை  பிரதிமேயர் ரஹ்மத் மன்சூர் கல்முனை ஷிரி சுபாத்திராமா மகாவிகாரைக்குச் சென்று அங்குள்ள கலநிலவரத்தை விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துகல சங்க ரத்ன தேரரிடம் அறிந்து கொண்டார்.

அதன் பின் கல்முனை மாநகரசபை பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் அங்கு தேவைப்பாடாக காணப்பட்ட பொதுக்கிணற்றினை உடனடியாக  அடுத்த இரண்டு வாரத்திற்குல் பூர்த்தி செய்து தருவதாக வாக்குறுதியளித்து  இரண்டு வாரத்திற்குல் அக்குறைபாட்டினை நிவர்த்தி செய்து வைத்துள்ளார். அத்துடன் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துகல சங்க ரத்ன தேரர் அவ்விடத்தில் உரையாற்றும் போது தான் இந்த விகாரையில் பல வருடங்கள் இருந்து வாருவதாகவும் இப்படியான ஒரு வேலைத்திட்டத்தை யாரும் செய்யமுன்வரவில்லை எனவும் இன்று கல்முனை மாநகரசபை பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் செய்த சேவையானது தற்போதய நாட்டின் சூழ்நிலையில் முழு இலங்கைக்கும் முன்னூதாரனமான செயற்பாடாகவே இது அமைந்துள்ளது எனவும் இதற்காக விஷேட நன்றியினையும் விகாராதிபதி தனது உரையில் தெரிவித்தார்.

இப்போதுக் கிணற்றினை வழங்கி வைக்கும் வேலைத்திட்டத்தினை YWMA அமைப்பினரின் பூரண அனுசரனையிலும் ரஹ்மத் சமூக சேவை அமைப்பினரின் நேரடி கண்கானிப்பிலும் இவ்விகாரைக்கான குடிநீர் பிரச்சினையை நிவர்த்தி செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுகளில் கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்சத் காரியப்பர், சுகாதார பிரிவின் பொறுப்பாளர் எம். அகுசன் உட்பட உலமாக்கள், பௌண்டசனின் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments