Advertisement

Responsive Advertisement

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் "நாடும் தேசமும் உலகமும் அவளே" எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்பட்ட மகளிர் தின நிகழ்வு

 


சர்வதேச மகளிர் தினத்தையொட்டி "நாடும் தேசமும் உலகமும் அவளே" எனும் தொனிப்பொருளில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று (10) புதன்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் மதிற்பிற்குரிய திருமதி. சிவப்பிரியா வில்வரத்னம் அம்மணி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக சிரேஸ்ட சட்டத்தரணியும் முன்னைநாள் உயர்நீதிமன்ற நீதிபதியுமான மதிப்பிற்குரிய சந்திரமணி விஸ்வலிங்கம் அம்மணி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
இதன் போது சிறப்பு அதிதியான சிரேஸ்ட சட்டத்தரணியும் முன்னைநாள் உயர்நீதிமன்ற நீதிபதியுமான மதிப்பிற்குரிய சந்திரமணி விஸ்வலிங்கம் அம்மணி அவர்களிற்கு “மாண்புறு மங்கையர்-2021” விருது வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும். அத்தோடு மதிப்பிற்குரிய சந்திரமணி விஸ்வலிங்கம் அம்மணி அவர்களால் ஆற்றப்பட்ட தற்காலத்தில் மகளீர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் அது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்பான கருத்துரை அனைவரது கவனத்தையும் கவர்ந்த்திருந்தது.
மேலும் சமுர்த்தி மகா சங்கங்களில் சிறப்பாக செயற்பட்ட சங்கங்களின் தலைவிகளும் மற்றும் குடும்ப தலைமைத்துவங்களுடாக வெற்றி பெற்ற பெண்களும் பாராட்டப்பட்டதுடன் மகளிர் தினத்தை சிறப்புக்கும் முகமாக பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.














Post a Comment

0 Comments