( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
புதிய ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளும் வித்தியாரம்ப விழா கடந்த திங்கட்கிழமை பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை களுவாஞ்சிக்குடி யில் மிகவும் விமரிசையாக இடம்பெற்றது.
ஆரம்ப பிரிவு பகுதித் தலைவர் திரு. எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்லூரி முதல்வர் திரு.எம்.சபேஸ்குமார் பிரதம அதிதியாகவும் , பிரதி அதிபர் ரீ.ஜனேந்திரராசா , உதவி அதிபர்களான திரு.எம்.ரவிச்சந்திரன் , ஏ.கலாபராஜன், வீ.ரவீந்திரமூர்த்திஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் , வகுப்பாசிரியர்களான திருமதி.கீ.ராகவன் , திருமதி.வீ.விமலசேன ,
திருமதி.எஸ்.டர்சியானா , திருமதி. செள.தர்மேந்திரா ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
புதிய மாணவர்கள் சிரேஸ்ட மாணவர்களால் இனிப்புகள் வழங்கி வரவேற்கப்பட்டதுடன் அதிதிகளும் மாணவர்களால் மாலை சூடி புதிய வகுப்பறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிகழ்வில் முதலாம் ஆண்டு மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர்.
0 Comments