Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

எகிப்தில் நேருக்கு நேர் மோதிய பயணிகள் புகையிரதங்கள்! 32 பேர் பலி

 


மத்திய எகிப்தில் இன்று இடம்பெற்ற புகையிரத விபத்தில் சுமார் 32 பேர் உயிரிழந்துள்ளதாக எகிப்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரண்டு பயணிகள் புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

சோஹாக் மாகாணத்தின் தஹ்தா மாவட்டத்தில், தலைநகர் கெய்ரோவிலிருந்து தெற்கே 460 கிலோமீற்றர் (285 மைல்) தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மேலும் 66 பேர் காயமடைந்துள்ளதுடன் மீட்புப் பணிகள் இடம்பெற்றுவருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிக வேகத்தில் செல்லும்போதே இரு புகையிரதங்களும் மோதியுள்ள நிலையில், இரண்டு புகையிரத பெட்டிகள் கடும் சேதமடைந்தும், மூன்றில் ஒரு பகுதி புகையிரத பெட்டிகள் தடம்புரண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மூன்று கார்களும் சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments