Advertisement

Responsive Advertisement

2021ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியன ஒத்திவைக்கப்பட்டது!!


 2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியன திட்டமிட்டபடி எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடாத்தப்படமாட்டது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவிருந்த கல்வி பொதுத்தராதர உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக பாடத்திட்டங்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாத்திற்குள் நிறைவு செய்வது சவாலானது என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments