Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் புர்காவிற்கு தடை! கையெழுத்திட்டார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

 


இலங்கையில் புர்காவை தடை செய்வதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

புர்காவை தடை செய்வது தொடர்பான யோசனையொன்று எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழு, புர்காவை தடை செய்யுமாறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையிலேயே புர்காவை தடை செய்வதற்கான உத்தரவில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கையெழுத்திட்டுள்ளார்.

Post a Comment

0 Comments