Home » » 15 ஓவர்கள் மட்டுப்படுத்த கிரிக்கட் போட்டியில் ஓட்டமாவடி , பதுரியா , மாஞ்சோலை இஹ்ஸான் சுப்பர் லெஜன்ஸ் விளையாட்டு கழகம் 53 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

15 ஓவர்கள் மட்டுப்படுத்த கிரிக்கட் போட்டியில் ஓட்டமாவடி , பதுரியா , மாஞ்சோலை இஹ்ஸான் சுப்பர் லெஜன்ஸ் விளையாட்டு கழகம் 53 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

 



(  எம்.ஐ.எம்.அஸ்ஹர் )

  ஓட்டமாவடி , பதுரியா , மாஞ்சோலை இஹ்ஸான் விளையாட்டுக் கழகத்தின்   வருடாந்த சிரேஸ்ட வீரர்களுக்கிடையில் அல் ஹிரா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இஹ்ஸான் அல்ரா லெஜன்ஸ்  அணிக்கு  எதிரான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய  பதுரியா , மாஞ்சோலை இஹ்ஸான் சுப்பர் லெஜன்ஸ் விளையாட்டு கழகம் 15  ஓவர்களில் 9  விக்கட்டுக்களை இழந்து 203  ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பாடிய  இஹ்ஸான் அல்ரா லெஜன்ஸ்  அணி 14.4  ஓவர்களில் சகல  விக்கட்டுக்களையும்  இழந்து 150  ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டனர்
இப்போட்டியில்  மாஞ்சோலை இஹ்ஸான் சுப்பர் லெஜன்ஸ் சார்பில் நஜீம்  4 ஓவர்கள் பந்து வீசி 26 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும் , இஹ்ஸான் அல்ரா லெஜன்ஸ்  அணி சார்பில் அமீர்  3  ஓவர்கள் பந்து வீசி 22  ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.

இப்போட்டியில் ஆட்ட நாயகனாக  மாஞ்சோலை இஹ்ஸான் சுப்பர் லெஜன்ஸ் அணியை சேர்ந்த நஜீம்  தெரிவு செய்யப்பட்டார்.

  ஓட்டமாவடி , பதுரியா , மாஞ்சோலை இஹ்ஸான் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.றிபாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்விற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் கலந்து கொண்டு வெற்றியீட்டிய வீரர்களுக்கு கிண்ணங்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்தார்.  
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |