Home » » வெள்ளைக் கொடி காட்டிய வேளையிலும் சுட்டுக்கொல்லப்பட்டதை பார்த்திருக்கிறோம்! நவநீதம்பிள்ளை பகிரங்க தகவல்

வெள்ளைக் கொடி காட்டிய வேளையிலும் சுட்டுக்கொல்லப்பட்டதை பார்த்திருக்கிறோம்! நவநீதம்பிள்ளை பகிரங்க தகவல்

 


தமிழ் பொதுமக்கள் மீதான கடுமையான விமான குண்டுவீச்சுகளையும் அவர்களின் வீடுகள் மருத்துவமனைகள் கோவில்கள் அடைக்கலம் கோரிய இடங்கள் அழிக்கப்பட்டதையும் நாங்கள் பார்த்திருக்கின்றோம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

இலங்கை குறித்து மனிதவுரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவரை மேற்கோள்காட்டி ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி ஆறுமாதங்களும் பல முறை சர்வதேச தொலைக்காட்சிகளில் காணொளிகள் வெளியாகியுள்ளன.

நாங்கள் பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் என குற்றம்சாட்டப்படுபவர்களை இலங்கை இராணுவம் அவர்கள் வெள்ளைக் கொடியை காண்பித்தவேளையிலும் சுட்டுக்கொல்வதை பார்த்திருக்கின்றோம்.

தமிழ் பொதுமக்கள் மீதான கடுமையான விமான குண்டுவீச்சுகளையும் அவர்களின் வீடுகள், மருத்துவமனைகள், கோவில்கள்,மற்றும் அடைக்கலம் கோரிய இடங்கள் அழிக்கப்பட்டதை நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

பயங்கரவாதிகள் என குற்றம்சாட்டப்படுபவர்கள் கைதுசெய்யப்பட்ட பின்னரும் இந்த தாக்குதல் இடம்பெற்றது.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தவேளை எறிகணை தாக்குதலுக்கு உள்ளான மருத்துவமனைகளின் மருத்துவர்களின் உதவிக்கான இறுதிக்குரலை நாங்கள் செவிமடுத்திருக்கின்றோம்.

இதேவேளை, மனித உரிமை பேரவை உறுதியான விதத்தில் செயற்பட்டு இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை இலங்கை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இந்தநிலையில், தமிழர்களுக்கு எதிரான கடுமையான மனித உரிமை மீறல் குற்றவாளிகளை எந்த வித தயக்கமும் இன்றி பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தவேண்டும்.

கோட்டாபயவின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் சட்டத்தின் ஆட்சி தோற்கடிக்கப்பட்ட மக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்த சர்வதேச தராதரங்கள் ஆகியவற்றின் மீதான யுத்தமாக மாற அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |