P
கோவிட் -19 தொற்று காரணமாக இலங்கையில் முதல் வைத்தியர் இறந்ததைத் தொடர்ந்து, அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று அவசர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் வைரஸ் பரவுவது குறித்து அதிகாரிகளும் பொதுமக்களும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்கு உரையாற்றிய வைத்தியர் ஹரித அலுத்கே,
கராபிட்டி மருத்துவமனையில் ஒரு மருத்துவர் இறந்த நிலையில் நாடு ஆபத்தான சூழ்நிலையை நோக்கி நகர்கிறது என்றார்.
எனவே, வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கூட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், என்றார்.
"மக்களுக்கு தடுப்பூசி போடுவது பரவுவதைத் தடுக்க உதவும். இலங்கை மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும்," என்று அவர் கூறினார்.
அரசாங்கம் மிகவும் பயனுள்ள தடுப்பூசிகளை இறக்குமதி செய்து நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் வழங்க வேண்டும், என்றார்.
மேலும், பி.சி.ஆர் சோதனைகளை முடிந்தவரை அதிகரிக்க வேண்டும் என்று வைத்தியர் கூறினார்.
0 comments: